பிரித்தானியாவில் அதிகரிக்கும் Omicron

பிரித்தானியாவில் Omicron வைரஸால் மேலும் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 75 பேருக்கு Omicron தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக UK Health Security Agency (UKHSA) உறுதிப்படுத்தியது. இது முன்பிருந்த எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இருமடங்கு பாதிப்பு ஆகும்.

வேல்ஸ் பகுதியில் முதல்முறையாக ஒருவருக்கு Omicron தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதிதாக இன்று 104 பேருக்கு Omicron தொற்று உறுதியானது.

அதனுடன் சேர்த்து, இதுவரை பிரித்தானியாவில் Omicron வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 134-ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு மிட்லாண்ட்ஸ், கிழக்கு இங்கிலாந்து, லண்டன் , வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் Omicron பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஸ்காட்லாந்தில் 16-ஆகி இருந்த Omicron பாதிப்பு எண்ணிக்கை இன்று 29-ஆக அதிகரித்துள்ளது.

வடக்கு அயர்லாந்தில் வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

புதிதாக பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கெனெவே இரட்டை தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட நபர்களா அல்லது தடுப்பூசி போடாத நபர்களா என்பது தற்போது தெரியவில்லை.