பிரான்சில் Omicron தொற்று உடைய 8 பேர் அடையாளம், காணப்பட்டுள்ளனர்

பிரான்சில் 8 பேர் Omicron வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரான்சின் சுகாதார அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் Omicron வைரஸால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என 8 பேரை கண்டறிந்ததாகக் கூறியது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து பிரான்சிற்கு வந்துள்ள அவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் Omicron வகை வைரஸால் தான் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை முழுமையாக உறுதிப்படுத்த இன்னும் பல நாட்கள் ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

போட்ஸ்வானாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வகை கொரோனா வைரஸ், தற்போது பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், அவுஸ்திரேலியா மற்றும் ஹொங்ஹொங் உள்ளிட்ட பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.