வெள்ளக்காடான சென்னை

வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் எதிரொலியால், சென்னையில் நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்தது. இந்நிலையில், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, கனமழையும் பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் ஆலந்தூர், பெருங்குடி, தரமணி, மீனம்பாக்கம், பரங்கிமலை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதேபோல், கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், வானகரம், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளிலும் கனமழை விடாமல் பெய்து வருகிறது.

இதனால், சாலை எங்கும் மழை நீர் தேங்கி உள்ளது.