சிறைச்சாலையில் இருந்த ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து தொலைபேசி மீட்பு!

வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் (Ranjan Ramanayake) இருந்து தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்று இரவு (21) சனிக்கிழமை 10 மணியளவில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து கையடக்க தொலைபேசி ஒன்றும், ஹேன்ட் பிரீ ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவிடம் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மூவரடங்கிய நீதிபதிகள் முன் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.