மாகாண சபைத் தேர்தலுக்காக தயாராகும் புதிய சட்டம்

கடந்த அரசாங்கம் வேண்டுமென்றே மற்றும் தந்திரோபாயமாக மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்ததாகக் கூறிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று குற்றம் சுமத்தினார்.

எனினும் தற்போதைய அரசாங்கம் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான புதிய சட்டங்களை இயற்றுவதற்கு இயன்றவரை முயற்சி செய்து வருவதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

”புதிய சட்டமொன்றை நிறைவேற்றாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது என சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்”

மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய கேள்வித் தொடர்பில் தெளிவுபடுத்தியபோதே அமைச்சர் இதனைக்குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை முன்வைப்பதற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழு அயராது உழைத்து வருகிறது.

அவர் தலைமையிலான குழு இது தொடா்பில் ஆராய, வாரம் இருமுறை கூடுகிறது என்றும் ஜிஎல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்