கோலிவுட்டின் சின்னத்திரையில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் மற்றும் ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். கடந்த 2015இல் மாடலாக களமிறங்கிய ஷிவானி சரவணன் மீனாட்சி சீரியலில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரையில் களம் இறங்கினார்.
அதன் பின்னர் தனது நடிப்புத் திறமை மூலமாக நிறைய சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் சிவானி நாராயணனுக்கு கிடைத்தது. பகல் நிலவு சீரியல் இல் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதில் ஹீரோவுடன் சேர்ந்து ஷிவானி செய்யும் ரொமான்ஸ் ரசிகர்கள் மனதில் எப்பொழுதும் இருக்கும்.
View this post on Instagram
கடந்த பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக ஷிவானி நாராயணன் கலந்து கொண்டார். தனது போட்டோ சூட்டின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருந்த ஷிவானி பிக் பாஸ் வீட்டில் சென்ற பின்னர் ஒன்றுமே செய்யாமல் மிக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதனால் ரசிகர்களால் அவர் வெளியேற்றப்பட்டார்.
தற்போது அவர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.







