மனைவிக்கு பாலியல் தொல்லை., நண்பனை கட்டி காவேரி ஆற்றில் இறக்கிய கணவன்.!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். இவர் சம்பத்தன்று ஒரு திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, தன்னுடைய நண்பரான வெங்கடேஷ் வீட்டுக்கு சென்றுள்ளார்.

ஆனால், அன்றுமுதல் அரவிந்தன் வீடு திரும்பவில்லை, இதனால் சந்தேகமடைந்த அவரின் உறவினர்கள் வெங்கடேஷ் இடம் அரவிந்தன் எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு அவர் சரியான முறையில் பதில் அளிக்காததால், அவரிடம் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

உடனடியாக உறவினர்களிடம் இருந்து தப்பிய வெங்கடேஷ், காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதனையடுத்து வெங்கடேஷிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அரவிந்தனை கொலை செய்ததாக வெங்கடேஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.

அவரின் அந்த வாக்கு மூலத்தில், “எனது மனைவிக்கு நண்பன் அரவிந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததால், அரவிந்தனை குடிநீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தேன். பின்னர் அவரது சடலத்தை எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் வீசி விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வெங்கடேஷை கைது செய்த போலீசார், கொலைக்கு உதவியாக இருந்த அவரது தம்பியையும் கைது செய்துள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் வெள்ளபேருக்கு ஏற்பட்டுள்ளதால் அரவிந்தன் உடலை மீட்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.