வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்த விக்ராந்திற்கு விஜயின் நெகிழ்ச்சி செயல்!

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் சர்வைவர். இந்த நிகழ்ச்சி தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் தொடர்ந்து இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதிக ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வரும் நடிகர் தான் விக்ராந்த் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்று தான் கூற வேண்டும். இவர் நடிகர் மத்திரமின்றி நடிகர் விஜய்யின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விக்ராந்த் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கவில்லை என்றாலும் இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு நன்றாக கை கொடுத்தது மேலும் இவர் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டத்தை பற்றி இந்த நிகழ்ச்சியில் போது சக போட்டியாளர்களிடம் கூறியுள்ளார்.

அப்படி அவர் தெரிவிக்கும்போது, என்னால் ஒரு கட்டத்தில் என்னுடைய வீட்டு வாடகையை கூட ஒழுங்காக கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது அப்பொழுது வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை என்று வீட்டின் உரிமையாளர் வந்து சில நேரங்களில் நிறைய தவறான வார்த்தைகளில் கூட சொல்லி திட்டி உள்ளாராம். அப்பொழுதெல்லாம் நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் எப்படியோ விஜய் அண்ணாவிற்கு தெரிந்து விட்டது. ஒரு சில வாரங்களிலேயே எங்களுக்கு ஒரு புதிய வீடு வாங்கி அன்பளிப்பாக கொடுத்து விட்டார். அவர் செய்த உதவியை நான் என்றுமே மறக்க மாட்டேன் என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்றால் அது தான் என்று இவர் கூறிய வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.