நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு… வெளியான தகவல்!

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதத்தின் முதல் 04 நாள்களில் மாத்திரம் 505 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என அப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதத்தில், டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,979ஆக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் , நுளம்புகள் பெருகும் இடங்களை ஒழிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவுசெய்யப்பட்ட 59 உயர் ஆபத்துள்ள பகுதிகளில் இது ஆரம்பிக்கப்படுமென அந்த பிரிவு தெரிவித்துள்ளது.