தன்னை விட இளையவரை மணக்கும் சூப்பர் சிங்கர் மாளவிகா

சூப்பர் சிங்கர் புகழ் மாளவிகா சுந்தர், தன்னை விட வயது குறைவான நபரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று “சூப்பர் சிங்கர்”.

இந்த ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர்களில் ஒருவர் மாளவிகா சுந்தர், நிறைய மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றி அசத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக அறிவித்தார், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு கலந்துரையாடினார்.

அப்போது, உங்களை விட உங்களது கணவருக்கு வயது குறைவா? என்ற கேள்விக்கு, ஆம், என்னை விட ஒரு வயது குறைவானவர் தான். திருமணத்திற்கு வயது ஒரு தடையில்லை, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மரியாதையாக வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.