புசுபுசுனு இருந்த அர்ஜுன்ரெட்டி பட நடிகையா இது.?!

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து ஒரு படத்திலேயே முன்னணி நடிகைகளுக்கு இணையாக வளர்ந்து வந்தவர் நடிகை ஷாலினி பாண்டே.

இதனைத்தொடர்ந்து கொரில்லா படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தார். அதன் பிறகு ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்த 100 சதவீதம் காதல் படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் தயாராகும் நிசப்தம் படத்தில் மாதவன், அனுஷ்காவுடன் நடித்து வருகிறார்.


மேலும் சில படங்களில் நடிக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. தற்போது அதிக பட வாய்ப்பு வருவதால், வாய்ப்பை விட மனமில்லாமல் தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒதுக்கிய தேதிகளை இந்தி படத்துக்கு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார். இதற்கு காரணம் அவர் மிக ஸ்லிம்மாக இருப்பது தான்.