இலங்கையில் 70 சத வீத மக்களுக்கு கொரோனோ தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது!

இலங்கை மக்கள் தொகையில் நூற்றுக்கு 70 சத வீதமானவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் 30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

20-29 வயதானவர்களில் 60 சத வீதமானோருக்கும், 15-19 வயதானவர்களில் 32 சத வீதமானோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மொத்த சனதொகையான 2 இரண்டு கோடியே 86 லட்சம் மக்களில், கோடியே 33 லட்சம் மக்களுக்கு முழுமையாக கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.