போக்கோ எம்4 ப்ரோ இந்த தேதியில் தான் வெளியாகிறது

போக்கோ பிராண்டின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் புதிய போக்கோ 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இது போக்கோ எம்3 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கிறது.

புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசரில் அதன் அம்சங்கள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி போக்கோ ஸ்மார்ட்போன் 21091116ஏசி எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.