பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக 4 சீசன் களை கடந்து தற்போது 5வது சீசனுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏற்படும்.
அதுபோல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் வெறுப்பையும் மக்களிடம் சம்பாதித்து செல்வார்கள். ஒரு சிலரோ பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து பட வாய்ப்புகள் குவிய வேற லெவலுக்கு சென்று விடுவார்கள்.
View this post on Instagram
அதுபோல பிக் பாஸ் வீட்டில் அவ்வப்போது காதல்களும் அருந்துவதுண்டு. ஆனால் இந்த வீட்டில் தோன்றும் காதல் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் காணாமல் போய்விடும். இப்படிப்பட்ட நிலையில் கொரானா காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிக்பாஸ் ஐந்தாவது சீசனுக்கான அறிவிப்பு வெளியாகியது.
மொத்தமாக பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த பிக் பாஸ் சீசன் ஐந்தில் முதன்முதலில் நமீதா மாரிமுத்து சொந்த காரணங்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இத்தகைய நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஆரம்பித்துவிட்டன. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இமான் அண்ணாச்சியுடன் அபிஷேக் சண்டையிடும் காட்சிகள் அமைந்துள்ளது. அப்பொழுது அபிஷேக்கிடம் பிரியங்கா அதெல்லாம் நீ பேசாதே என்று அதட்டுக்கிறார்.







