சத்தியமா மக்கள் முன்னாடி காணாம போகமாட்டேன் சார் : கதறி அழுத சின்னப்பொண்ணு.

சத்தியமாக நான் மக்கள் முன்னாடி காணாமல் போக மாட்டேன் என கமல்ஹாசன் முன்னிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சின்னப்பொண்ணு கதறி அழுத வீடியோ காட்சி இன்றைய 2-வது புரமோவில் உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒளிர்ந்தவர்கள் யார்? ஜொலித்தவர்கள் யார்? காணாமல் போனவர்கள் யார் என்பது குறித்து பிக்பாஸ் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து போட்டியாளர்கள் ஒரு சிலரின் பெயர்களை பரிசீலனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பியபோது ஜொலித்தவர் என இமான் அண்ணாச்சியையும் காணாமல் போனவர் என சின்ன பொண்ணு மட்டும் நாடியா ஆகிய இருவரையும் அபிஷேக் கூறினார்
அபிஷேக்கின் இந்த பதிலுக்கு நாடியா தக்க பதிலடி கொடுத்த நிலையில் சின்ன பொண்ணு கதறி அழுதவாறு மக்கள் முன்னிலையில் நான் என்றுமே காணாமல் போக மாட்டேன் சார் என்று கூறியது பரிதாபமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது