ஐஸ்வர்யா தத்தாவால் குழம்பிய ரசிகர்கள்.!

பிரபல நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் கதாநாயகன் நகுலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதன்பின்னர் ஐஸ்வர்யாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் அவர் பங்கேற்றார். அங்கே யாஷிகாவுடன் அவருக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பின்னரும் இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)


இந்நிலையில், தற்போது காதல் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் மெலிசான உடை அணிந்து வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.