வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜேர்மனிய பெண்!

இரம்புக்கனை பகுதியில் தனியாக வசிந்து வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வெளிநாட்டு பெண்ணின் சடலத்தை இரம்புக்கனை ஹிரிவட்டுன்ன பிட்டவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை மதியம் (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டு பெண் 65 வயதான சபீன் என்ற ஜேர்மனிய பெண்மணி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

இலங்கைக்கு 20 வருடங்களுக்கு முன் வந்த குறித்த ஜேர்மனிய பெண்மணி வத்தளை ஹெடேரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். பின்னர் விவாகரத்து செய்துள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜேர்மனிய பெண் விவாகரத்துக்கு பின் 2016 ஆம் ஆண்டு முதல் இரம்புக்கனை பிட்டவல பிரதேசத்தில் தனியாக செல்லப் பிராணியாக நாய்களை வளர்த்து வந்துள்ளதுடன் அவர் வீட்டில் 12 நாய்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த இலங்கை வாழ் ஜேர்மனிய பெண்மணி வீதிகளில் நோய்வாய்பட்டு இருக்கும் நாய்களை வீட்டிற்கு கொண்டு வந்து சிகிச்சையளித்து மீண்டும் வீதியில் சென்று விட்டு வருவார் எனவும், அவர் பிரதேசத்தில் இருக்கும் கட்டாகாலி நாய்களுக்கு உணவை சமைத்து கொடுத்து வந்துள்ளதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.