சர்வைவர் நிகழ்ச்சியில் தனக்கு அநீதி ஏற்ப்பட்டதாக Lady Kash வெளியிட்ட வீடியோ பதிவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மிக பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி சர்வைவர்.

நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளர்னர்.

இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான Lady Kash இந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறியுள்ளார்.

மேலும் தற்போது அதற்கான நீண்ட காரணத்தை பதிவிட்டு, தனக்கு சர்வைவர் நிகழ்ச்சியில் அநீதி நடந்ததாக கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் உடல்நலம் சரியில்லாத அவர்களை பல Covid அறிகுறிகள் இருந்த போதிலும், போட்டி நடக்கும் இடமான ‘Tanzania’-வில் Covid பாதிப்பு இல்லாத காரணத்தினால் எங்களுக்கு Covid பரிசோதனை செய்யப்படவில்லை.

மேலும் ஹோஸ்டின் வேண்டுகோளின் படி பின்னர் அவர்களுக்கு Covid பரிசோதனை பெற்றுக்கொள்ள பட்டுள்ளது. அவர்கள் தனிப்படுத்தப்பட்ட நேரத்தில் பல கஷ்டங்களை அனுபவித்ததாகவும், பின்னர் போட்டியில் அவர் பங்கேற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்நிகழ்ச்சியில் அவர் நடந்த அநீதி குறித்து மிக நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவை நீங்களே பாருங்கள்