அவுஸ்திரேலியாவில் தடுப்பூசி பெறாமல் இருப்பவர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

அவுஸ்திரேலியாவில் சிட்னி மாகாணத்தில் ஊரடங்கு முடிவுக்கு வரும் சமயத்தில் தடுப்பூசி செலுத்தாமல் இருப்போருக்கு மாட்டும் சில கட்டுப்டுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த மாத நடுப்பாதியிலிருந்து சிட்னி மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தடுப்பூசி செலுத்தாதோர் சமூக ஒன்று கூடல் போன்ற சிலவற்றில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்.

அதனையடுத்து மேலும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்போருக்கு கடைகள்,உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் போன்ற பகுதிகளுக்கும் அனுமதிக்கப்பட மாட்டர் என நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.