இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா விவரங்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எஸ் பென் வசதி கொண்டிருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதில் 6.8 இன்ச் வளைந்த டிஸ்ப்ளே, குவாட் ஹெச்.டி. பிளஸ் அடாப்டிவ் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் புதிய கேமரா மாட்யூல், 108 எம்பி பிரைமரி கேமரா, பில்ட் இன் எஸ் பென் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 2200 அல்லது ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் வழங்கப்படலாம். இந்தியாவில் இம்முறை கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. தற்போது கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், விரைவில் கேலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22 பிளஸ் மாடல்களின் ரெண்டர்களும் வெளியாகலாம்.