31 ஆண்டுகளுக்கு பிறகு ரகசியத்தை உடைத்த இளையராஜா..!!

தற்போது சமூக வலைதளங்களில் எந்தப் பக்கம் போனாலும் இளையராஜா இசையில் உருவான ‘பேர் வச்சாலும்’ பாடல்தான் கண்முன் தெரிந்து வருகிறது. 1990ம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்தான் இது.

இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி பாடிய இந்தப் பாடலை, 31 ஆண்டுகளுக்கு பிறகு சந்தானம் படத்தில் வெளியான டிக்கிலோனா படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. பின்னர், பாடகர்களின் குரல்களை மாற்றாமல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்துள்ளார்.

தற்போது, பட்டி தொட்டியெங்கும் ஒளித்து வரும் இந்தப் பாடல் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதனிடையே, இந்தப் பாடல் சாதனை படைத்துள்ளது தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவின் தந்தையும், அந்தப் பாடலுக்கு ஒரிஜினல் இசையமைப்பாளருமான இளையராஜா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், இந்தப் பாடலின் ரகசியத்தை அவர் போட்டுடைத்துள்ளார். அதாவது, துப்பார்க்கு துப்பாய திருக்குறளின் சந்தம்தான், இந்தப் பாடலுக்கு அடித்தளம் என்று அவர் கூறியுள்ளார்.