இலங்கையில் ஊரடங்கு மத்தியிலும் வைரலாகும் வீடியோ!

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள நிலையில் நாட்டிலுள்ள மதுபான நிலையங்களை மீண்டும் நேற்று திறக்க அனுமதியளிக்கப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து மதுபானத்தைப் பெறும் ஆவலில் மதுப்பிரியர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானக் கடைகளில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, மலையகம் ஆகிய பகுதிகளில் இவ்வாறு மதுப்பிரியர்கள் மதுபானசாலைகளை நோக்கி படையெடுத்தனர்.


டெல்டா கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் மதுபானங்களை வாங்குவதற்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்ட போதிலும் மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டு காணப்பட்டமையால் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்புள்ளதாக மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளமையானது மக்களிடத்தில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில மதுபானக் கடைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மதுப்பிரியர்கள் முறையான சுகாதார நடைமுறைகளைக் கூட பின்பற்றாமல் மதுபானங்களை வாங்க திரண்டிருந்தனர்.