மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பு -சித்தாண்டி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை நேற்று(14) இரவு முற்றுகையிட்ட பொலிஸார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை 14,000 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் கைது செய்ததுடன், கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதரிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்பி..பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு குறித்த பிரதேசத்திலுள்ள கசிப்பு உற்பத்தி செய்து வந்த வீட்டை முற்றுகையிட்டனர் .

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 14.000 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களை மீட்டு ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.