விநாயகருக்கு 10 கிலோ தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கிய பக்தர்

கடந்த 10ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புனேவில் உள்ள டேக்துஸ்யேத் ஹல்வாய் விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு 10 கிலோ தங்க கிரீடத்தை பக்தர் ஒவர் காணிக்கையாக கொடுத்துள்ளார்.

மேலும், விநாயகர் சதுர்த்தி நாளான்று இந்த காணிக்கையை செலுத்தியுள்ளார். இது இந்த கணபதிக்கு ஸ்பெஷல் ஈர்ப்பை கொடுத்துள்ளது. 10 கிலோ தங்க கீரிடத்துடன் உள்ள கணபதியை காண ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

இந்த கிரீடத்தை வழங்கிய பக்தரின் பெயரை வெளியிட கோவில் நிர்வாகத்தார் மறுத்துவிட்டனர். இந்த 10 கிலோ தங்க கிரீடத்துடன் கணபதி தரிசனம் தரும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.