பிரான்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நாளை முதல் அமெரிக்காவிலிருந்து வரும் தடுப்பூசி பெறாத சுற்றுலாப்பயணிகள் பிரான்சுக்குள் வர தடை விதிக்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் தொடர்ந்து டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அமெரிக்கா பிரான்சின் பச்சை பயணப் பட்டியலிலிருந்து ஆரஞ்சு பட்டியலுக்கு மாற்றப்படுவதாக நேற்று பிரான்ஸ் அரசு அறிவித்தது.

ஆகவே, நாளை, அதாவது செப்டம்பர் 12 முதல், அமெரிக்காவிலிருந்து அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக பிரான்ஸ் வரும் தடுப்பூசி பெறாத பயணிகளுக்கு நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கான விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் தாங்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான ஆதாரத்தைக் காட்டி பிரான்சுக்குள் வரலாம். ஆனால், பைசர், மொடெர்னா, ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி.

தடுப்பூசி பெறாத பயணிகள் அத்தியாவசிய காரணங்களுக்காக பிரான்ஸ் வர நேரிடும் பட்சத்தில், அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுவதோடு, பிரான்சுக்குள் வந்ததும் தங்களை ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவும் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.