தமிழ் சின்னத்திரையில், ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு எப்பொழுதும் இருக்கும். இந்த சீரியல் கதாபாத்திரங்கள் தங்களது குடும்பத்தில் ஒருவராக மக்கள் பாவித்து கொள்வது சின்னத்திரைக்கும், அதன் ரசிகர்களுக்கும் இடையேயான ஓர் நெகிழ்ச்சியான உறவாக இருக்கும்.
அந்த வகையில் ஜீ தமிழில், செம்பருத்தி சீரியல் மிகவும் பிரபலமானது. இதில், பார்வதி கதாபாத்திரத்தில் நடிகை ஷபானா நடிப்பார். அவ்வப்போது இவரது திருமணம் மற்றும் காதல் குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுவது வழக்கம்.
View this post on Instagram
விஜய் தொலைக்காட்சியில், பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் பிரபலமானது. இதில் செழியன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடித்து வருகிறார். சபானாவும், ஆரியனும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
தற்போது இவர்கள் திருமண நிச்சயம் செய்துள்ளனர். சமீபத்தில் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காதலுடன் பகிர்ந்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது நடிகை ஷபானா இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.







