சமையல் எரிவாயுவை வைத்து பெண் ஒருவர் மோசடி!

இலங்கையில் மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டரை நீல நிறமாக மாற்றி பெண் ஒருவர் மோசடி செய்ச சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி ஒரு பெண் இச்செயலில் ஈடுபட்டதாக சிசிரிவி காணொளி வெளிப்படுத்தியுள்ளது.

ஹற்றன் டிக்கோயாவிலுள்ள ஓர் எரிவாயு வியாபாரியிடமே இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கடையின் சிசிரிவி காட்சிகளின்படி நேற்று(28) வெற்று எரிவாயு சிலிண்டர்களை லொறியில் ஏற்றும்போது சிலிண்டர் மஞ்சள் நிறமாக மாறியது தெரியவந்தது.

இதையடுத்து கடையின் வியாபாரி சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை நுகர்வோரின் தேவைக்கேற்ப லாஃப் எரிவாயு இன்னும் சந்தைக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.