பெண்ணின் சித்ரவதையால் கதறி துடிக்கும் குழந்தை: வாயிலிருந்து கொட்டும் ரத்தம்!

பச்சிளங் குழந்தையின் வாயில் போட்டு குத்தி சித்ரவதை செய்யும், பெண்ணின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைத்துள்ளது.

அந்த பெண் அவரது தாயா இல்லை பேயா என்று திட்டும் அளவுக்கு அவரது சித்தரவதை தொடர்கிறது.

குறித்த காட்சியில் இருக்கும் ஆண் குழந்தைக்கு 2 அல்லது 3 வயதுதான் இருக்கும் என தெரிகிறது. படுக்கையில் வீடியோவை வைக்கும் அந்த பெண் சம்பந்தப்பட்ட ஆண் குழந்தையை தனது மடி அருகே படுக்க வைத்து குழந்தையின் கைகளை பின்னால் வைத்து முறுக்குகிறார்.

பின்னர், அந்த பெண் தனது கையால் குழந்தையின் வாயில் மாறி குத்துகிறார். அதில் குழந்தையின் வாயில் இருந்து ரத்தம் கொட்ட வலியால் கதறி துடிக்கின்றது.

இன்னொரு வீடியோவில், குழந்தையின் காலில் உள்ள பெருவிரல் புண் புரையோடி காணப்படுவதிலேயே தனது கையை வைத்து குத்தி கொடுமை செய்கின்றார். மற்றொரு காட்சியில் குழந்தையின் முதுகைக் காட்டி பிரம்பால் அடித்த தடத்தினையும், அதில் ரத்தம் பிதுங்கிய நிலையில் இருப்பதையும், குழந்தை கதறுவதையும் காட்டியுள்ளார்.

மேலும் குழந்தை கதறி துடிப்பதை ரசித்து பார்க்கும் அப்பெண்ணிற்கு மனதில் கொஞ்சம் கூட ஈரம் இல்லை என்பதை இக்காட்சி காட்டியுள்ளது.

குறித்த பெண் யார் என்பதும், கையில் இருந்தது அவரது குழந்தை தானா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், குறித்த பெண் எடுத்த காட்சி தீயாய் பரவி வருகின்றது.

குழந்தையின் சித்ரவதை வெளி உலகத்திற்கு வந்துள்ள நிலையில், தற்போது குழந்தை உயிருடன் இருக்கின்றதா? என்பது தெரியாத நிலையில், குறித்த பெண்ணை கண்டுபிடித்து குழந்தையைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
https://www.facebook.com/JaguarNathan/videos/360693105780695