குஷ்பூவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபருக்கு குஷ்பூ கொடுத்த பதில்!

தமிழ் திரையுலகில் சின்னத்தம்பி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குஷ்பூ.

இதன்பின் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார்.

மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை குஷ்பூ உடல் எடையை குறைத்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த பதிவின் கமெண்டில், ரசிகர் ஒருவர், ‘என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார்’.

இதற்கு பதிலளித்த நடிகை குஷ்பூ ரொம்ப லேட். 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. என் கணவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.