90களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே ஆனந்த கண்ணன். தன் நகைச்சுவையான பாணியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பல ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
சிந்துபாத் உள்ளிட்ட சீரியலில் நடித்து சில படங்களில் நடித்து வந்த 5 வருடங்களாக ஆனந்த கண்ணன் புற்று நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மரணமடைந்த ஆனந்த கண்ணனுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனந்த் கண்ணன் நடிகை காஜல் பசுபதியின் நெருங்கிய நண்பர் என்பதால் அவரின் இழப்பு நினைத்து இணையத்தில் பதிவிட்டு சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.






