இலங்கை கர்ப்பிணித்தாய்மாருக்கு விரைவில் தடுப்பூசி செலுத்த முடிவு!

கர்ப்பிணி தாய்மாருக்கு ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பூசியை ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாடர்னா, ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளையும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி தாய்மாருக்கு சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றுவதற்கு மாத்திரமே இதற்கு முன்னர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 21 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 700 கர்ப்பிணிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 2800 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.