பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்..

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பலத் திரைப்படங்களில் நடித்த காமெடி நடிகர் காளிதாஸ் காலமானார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் காளிதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கணீர் குரலுக்கு சொந்தக்காரர் ஆன இவர், டப்பிங் கலைஞராக பல வில்லன் நடிகர்களுக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

நடிகர் காளிதாஸ், வில்லன், குணச்சித்திரம் ஆகிய கதாபாத்திரங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு முன்னதாக கொரோனா காலத்தில் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம், இயக்குனர்கள் எஸ்பி ஜனநாதன், கே வி ஆனந்த், நகைச்சுவை நடிகர் விவேக், பாண்டு, நெல்லை சிவா, கில்லி மாறன் உள்ளிட்ட பலரும் உயிரிழந்தனர். இந்நிலையில், நடிகர் காளிதாசும் கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்துள்ளார்.