பருத்தித்துறை பகுதியிலுள்ள இரு இந்து ஆலயங்களுக்கு பூட்டு!

யாழ்ப.பருத்தித்துறை பகுதியிலுள்ள இரு இந்து ஆலயங்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக நேற்று முதல் 14 நாட்களுக்கு அவற்றை மூட பருத்தித்துறை சுகாதார அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியிலுள்ள முனியப்பர் மற்றும் சிவன் ஆலயங்களில் நடைபெற்ற பக்தி வழிபாடுகளில் ஏராளமான மக்கள் எவ்வித சுகாதார விதிகளையும் பின்பற்றாது கலந்து கொண்டுள்ளனர்.

சுகாதார அலுவலர் அலுவலகம் முறைப்பாடுகளைப் பெற்றதையடுத்து அதன் அதிகாரிகள் கோவில்களுக்கு 14 நாட்களுக்கு சீல் வைத்ததுடன் அவர்களை தனிமைப்படுத்துமாறு அறங்காவலர் சபைக்கு அறிவுறுத்தினர்.

பருத்தித்துறையில் கொரோனா ஆபத்து அதிகமுள்ளதுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னமும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.