ஜேர்மனியில் ஊரடங்குக்கு எதிர்ப்பாக ஆர்ப்பட்டம் செய்தவர்கள் கைது!

ஜேர்மனியில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இதேபோன்று, ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயிரத்திற்கும் கூடுதலான போராட்டக்காரர்கள் தெருக்களில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைந்து போகும்படி பொலிஸார் கூறினர். எனினும், இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில், போராட்டம் நடத்தியவர்களில் 600 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொலிஸார் 10 பேர் காயமடைந்து உள்ளனர்.