டோக்கியோ ஒலிம்பிக்; குத்து சண்டை காலிறுதியில் சதீஷ் குமார் தோல்வி

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 10வது நாளான இன்று நடந்த சூப்பர் ஹெவி குத்து சண்டை (91 கிலோ எடை பிரிவு) காலிறுதி போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் மற்றும் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜலோலோவ் ஆகியோர் விளையாடினர். இந்த போட்டியில் சதீஷ் தோல்வி அடைந்து உள்ளார்.