இலங்கையில் நாணயத் தாள்களை அச்சிடுவதன் மூலம் தாக்கம் ஏதும் ஏற்ப்படாது

பெருந்தொகை ரூபா நாணயத் தாள்களை அச்சிடுவதன் மூலம் இலங்கையின் பணவீக்கம் அதிகரிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இதனை தெரிவித்துள்ளார்.

இணையத்தின் ஊடாக இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை நேற்று வெளியிட்டுள்ளார்.

கடந்த நாட்களில் டிரில்லியன் பெறுமதியான ரூபா தாள்கள் அச்சிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தற்போதைய டொலர் கையிருப்பு பிரச்சினையை தீர்க்காது என்று எதிக்கட்சி சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த நிலையிலேயே நிதி அமைச்சு செயலாளரின் கருத்து வெளியாகியுள்ளது.

அதன்படி, மத்திய வங்கி டொலர்களை தரும் போது அதற்கு ஈடாக நிதியமைச்சு ரூபாவை வழங்குகிறது.

மத்திய வங்கி அதனை ஒதுக்கங்களை பயன்படுத்தி செலுத்தும்.

எனவே அதிக நாணயத்தாள் அச்சிடப்படுவது பண நிரம்பலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார்.