இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வளம் வருபவர் நடிகை ஹன்ஷிகா. இவர் ஹிந்தி திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்க துவங்கினார், மெல்ல மெல்ல தனது நடிப்பு திறமையால், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிய அவர், தற்போது பல நடிகர்களுடன் தமிழ் திரையுலகில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டி நடிக்கவுள்ளராம் ஹன்ஷிகா. கொழுகொழுவென இருந்த நடிகை ஹன்சிகா சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப் படுவார்.
இந்த நிலையில், ஹன்சிகா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தற்போது அவர் மீண்டும் தனது உடல் எடையை அதிகரித்து வருகின்றார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram







