17 வயது சிறுவனிடம் அத்துமீறிய திருமணமான பெண்.. நேர்ந்த விபரீதம்!

செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு கிராமம் இருளப்பன் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். அச்சிறுவனின் பக்கத்து வீட்டில் 25 வயதுடைய திருமணமான பெண் தனது கணவருடன் வசித்துவருகிறார்.

இந்நிலையில், அந்த பெண் பக்கத்து வீட்டு சிறுவனுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன சிறுவன், இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் சிறுவனிடம் அந்த பெண் தகாத முறையில் நடந்துகொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இது போன்ற சம்பவங்கள் வெளிநாடுகளில் நடைபெற்றதை கேள்விப் பட்டிருப்போம். ஆனால், தற்போது தமிழகத்திலேயே நடைபெற்றுள்ளது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.