ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இத்தாலி அணி “சாம்பியன்”

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் இத்தாலி- இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தோல்வியே சந்திக்காமல் இறுதிசுற்றை எட்டியுள்ள இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.