நடிகர் சியான் விக்ரமின் சொத்துமதிப்பு இவ்வளவா!? 31 வருட சினிமா வாழ்க்கைல!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 90களில் இருந்தே கொடிக்கட்டி பறந்த நடிகர் விக்ரம். டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் கலைஞராக அறிமுகமாகி பின் நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நடிகராக வலம் வருகிறார்.

உடலை வறுத்திக்கொண்டு நடிக்கும் கலைஞர்களில் கமலுக்கு அடுத்தபடியாக இருப்பவர் என்ற பேர் பெற்றவர் சியான். சமீபத்தில் பல படங்களில் நடித்து வரும் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் மூலம் இன்னும் இளமை தோற்றத்தோடு காணப்படுகிறார்.

மகனையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி பார்த்த விக்ரம் 31 வருட சினிமா வாழ்க்கையை கடந்துள்ளார். அப்படியாக சினிமாவின் பல்வேறு இடங்களில் இருந்த சியான்ஜியின் சொத்து மதிப்பு சுமார் 140 லிருந்து 150 கோடியாம்.

2.3 கோடியில் Audi R8 காரும், 3.8 கோடியில் Porsche 911 Turbo car காரும், 69 லட்சத்தில் ஆடி Q7 காரும் வைத்துள்ளாராம். மேலும் 5 கோடி மதிப்புள்ள சென்னை பெசன்ட் நகரில் வீடும் இருக்கிறதாம். கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு சினிமா, விளம்பரம் என போராடி சம்பாதித்தது.

ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தனது கடின உழைப்பால் சியான் விக்ரம் கோலிவுட்டில் அசுர வளர்ச்சியை பார்த்துள்ளார்.