பிலிப்பைன்ஸ்: இராணுவ விமானம் தரையிறங்குகையில் விபத்து.. 17 பேர் பலி., 40 பேர் காயம்..!

பிலிப்பைன்ஸில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி 17 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா நகரில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஜோலா தீவு பகுதியில், அந்நாட்டின் இராணுவத்திற்கு சொந்தமான சி-130 ரக விமானம் ஆனது தனது இராணுவ பணியாளர்களுடன் தரையிறங்க முயற்சி செய்துள்ளது.

இதன் போது விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்ற நிலையில், விமானத்தை மீண்டும் உயர்த்த விமானி முயற்சித்துள்ளார். இந்த முயற்சி பலனளிக்காமல் விமானம் மரங்களுக்கு இடையே சிக்கி விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணம் செய்த இராணுவ வீரர்கள் 17 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், ஹெலிகாப்டர் மூலமாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், தற்போது வரை நடைபெற்ற மீட்பு பணியில் 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற இராணுவ வீரர்களின் நிலைமை குறித்த தகவல் இல்லாத நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த விமானத்தில் கிட்டத்தட்ட 95 பேர் பயணம் செய்திருக்கலாம் என்று கூறப்படுவதால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.