கமல் ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் 6 திரைப்படங்கள் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு கமல் ஹாசன் நடிப்பில் எந்தஒரு படமும் வெளியாகவில்லை. அதன்பிறகு அவர் அரசியலில் கவனம் செலுத்தியதால் படங்கள் வரவில்லை.

தற்போது அவர் அடுத்தடுத்து 6 படங்களில் நடிக்க தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1. கமல்ஹாசன் ஏற்கனவே நடித்து வந்த ‘இந்தியன் 2’ படம் கோர்ட்டு வழக்கில் சிக்கி உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

3. மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷயம் 2-ம் பாகத்தை தமிழில் பாபநாசம் 2 என்ற பெயரில் ரீமேக் செய்து நடிக்கவும் கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளார்.

4. அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் கமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

5. மேலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாகவும் புதிய தகவல் பரவி வருகிறது.

6. இதுதவிர தலைவன் இருக்கின்றான் படத்தையும் கமல் இயக்கி நடிக்க திட்டமிட்டு வருகிறாராம்.

இதன்முலம் கமல் ஹாசன் நடிப்பில் ஆறு திரைப்படங்கள் காத்துகொண்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.