யாழ்.மாவட்டத்தில் 31 பேர் உட்பட வடக்கில் 32 பேருக்கு தொற்று!

யாழ்.மாவட்டத்தில் 31 பேர் உட்பட வடக்கில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் அடிப்படையில் 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 18 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 11 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உட்பட,

வடக்கில் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.