பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனோட ஆளு, ஐஸ்வர்யாவா இது.?!

சின்னத்திரை ரசிகர்களின் உள்ளங்களை மிகவும் கவர்ந்த சீரியலாக விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் இருக்கிறது. அடுத்ததாக கதை எப்படி போகும் என்று ரசிகர்களை அன்றாடம் ஏங்க வைக்கிறது.

தற்போது அவர்களுக்கு சர்ப்ரைஸ் சம்பவங்கள் எதிர்வரும் எபிசோடுகளில் காத்திருக்கிறது. விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், சகோதர பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

கூட்டுக்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், இன்னல்கள், துயரங்கள் மற்றும் சந்தோஷங்கள் என்று அனைத்தையும் ரசிக்கும் விதமாக காட்டியிருப்பர். இது இல்லத்தரசிகளுக்கு ரசிக்கும் விதமாக இருக்கும்.

தற்போது இதில் ஐஸ்வர்யாராய் நடித்து வரும் விஜய் தீபிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவரது போட்டோ ஷூட் ஒன்று தற்போது இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது.