சத்தமில்லாமல் சாதித்த அண்ணாத்த படம்.!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. ரஜினி நடிக்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்திசுரேஷ் என நடிகை பட்டாளமே நடித்துள்ளது.

இந்நிலையில், இப்படம் சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளது. அண்ணாத்த பட அறிவிப்பின் போது அப்படத்தின் டைட்டில் லுக் வீடியோ வெளியானது. இந்த வீடியோவை யுடியூப்பில் இதுவரை 8 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த படத்தின் டைட்டில் லுக் வீடியோவையும் இவ்வளவு பேர் பார்த்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, ரஜினி ரசிகர்கள் இதை சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர்.