பிரான்ஸ்-போர்ச்சுகல் போட்டியில் நடந்த பரபரப்பு சம்பவம்

யூரோ கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது போர்ச்சுகல் ஜாம்பவான் ரொனால்டோ மீது கோகோ கோலா பாட்டில் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

யூரோ கால்பந்து தொடரில் நேற்று குரூப் F பிரிவில் நடந்த போட்டியில் உலக சாம்பியன் பிரான்ஸ், யூரோ சாம்யின் போர்ச்சுகல் அணிகள் மோதின.

இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. குரூப் F பிரிவில் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் போர்ச்சுகல் அணிகள் அடுத்து சுற்றான ரவுண்ட் 16-க்கு முன்னேறியது, ஹங்கேரி யூரோ தொடரிலிருந்து வெளியேறியது.

பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் பின்தங்கியிருந்த நிலையில், 60வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை ரொனால்டோ கோலடித்து போட்டியை சமன் செய்து அசத்தினார்.

பெனால்டி கோல் அடித்து விட்டு ரசிகர்களுக்கு அருகே சென்ற ரொனால்டோ கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, அரங்கத்தில் இருந்த ரசிகர் ரொனால்டோவை நோக்கி கோகோ கோலா பாட்டிலை வீசினார்.

அதுமட்டுமின்றி சில ரசிகர்கள் தண்ணீர் கப்களையும் ரொனால்டோ மீது வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

போட்டி முடிந்த பிறகு ரொனால்டோவை காண மைதானத்திற்குள் ஓடிந்தார், எனினும்பாதுகாவலர்கள் அவரை தடுத்து பிடித்து வெளியேற்றினர்.

 

View this post on Instagram

 

A post shared by ESPN FC (@espnfc)


சமீபத்தில் பத்திரக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரொனால்டோ, மேஜையின் மீது இருந்த கோகோ கோலா பாட்டில்களை ஓரமாக வைத்தது உலகளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

நாக் அவுட் சுற்றான ரவுண்ட் 16-ல் ஜூன் 28ம் திகதி நடக்கும் போட்டியில் போர்ச்சுகல் அணி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.