பிரபல தமிழ் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் திடீர் மரணம்!

பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் அமர சிகாமணி தனது 74 வயதில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

அது ஒரு கனாக்காலம், ரமணா, சிவாஜி போன்ற பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளவர் அமர சிகாமணி.

இவர் தேவயானியுடன் இணைந்து பெரும் வெற்றி பெற்ற கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தனது நடிப்பு திறமைக்காக கலைமாமணி விருதையும் அமர சிகாமணி பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் திடீர் மாரடைப்பால் அமர சிகாமணி உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அவரின் மகன் பார்த்திபன் உறுதி செய்துள்ளார்.

அவரின் மறைவுக்கு திரையுலகினர், சின்னத்திரை நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.