மானாட, மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலமாக சினிமாவிற்குள் அடி எடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதன் பின்னர், சிறு, சிறு படங்களில், நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திறப்பிடத்தின் மூலமாக அனைவராலும் கண்டறியப்பட்டார். அந்த படம் ஹிட் ஆகியதை தொடர்ந்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கின்றார்.
இதனை தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் தர்மதுரை, நடிகர் தனுஷுடன் வட சென்னை, சிவகார்த்திகேயனுடன் எங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் ஆகிய பல்வேறு ஹிட் படங்களில் நடித்து இருக்கின்றார். தற்பொழுது, நடிகர் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகின்ற ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.
இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருப்பு உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை கண்ட நெட்டிசன்கள் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலர் என்று பாட்டு வாசித்து வருகின்றனர்.
View this post on Instagram