இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் அண்மைய சில நாட்களாக கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.

எனவே கொவிட் உயிரிழப்புக்கள் அதிகளவில் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என கருதக்கூடிய விடயங்களை சுகாதார அமைச்சின் நிபுணர் குழு அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கொவிட் தொற்றாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்வதில் ஏற்படும் தாமதம் மற்றும் நோயாளர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெறுவதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பங்கள் போதுமானதாக இல்லாமை ஆகியனவே மரணங்கள் அதிகரிப்பதற்கான காரணமாக இருக்கலாம் என நிபுணர் குழு அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நோயாளர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெறுவதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பங்கள் போதுமானதாக இல்லாது காணப்படுகின்றது என முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, அதனை தவிர்ப்பதற்கு தேவையான விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.