நாட்டில் கொரோனா பரவலின் மூன்றாவது அலையில் 9 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா பரவலினால், நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.
இந்நிலையில், கொரோனா மூன்றாவது அலையில் மாத்திரம் 9 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.







